பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான “வெள்ளி யானை” விருது பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான “வெள்ளி யானை” விருது கிடைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனக்கு வழிகாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கே இந்த விருதின் பெருமை சாரும்! நமது சாதனை முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கமளித்து ஆலோசனை வழங்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். BSG வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரள் பேரணியைத் திருச்சியில் இந்தியாவே வியக்கும்படி நடத்தி முடித்திட தமிழ்நாடு சாரணர்கள் செய்திட்ட பங்களிப்பின் விளைச்சல்தான் இந்த விருது. இவ்விருதை சாரணர்களின் உழைப்பிற்கு அர்ப்பணிக்கிறேன். மேலும் வெள்ளி யானை விருது தந்துள்ள உற்சாகத்தோடு, நமது மாணவர்களின் நலனுக்கு மேலும் சிறப்பாக உழைக்க ஊக்கம் பெறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.