பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் விமானத்தில் சென்னை பயணம்: * வழியனுப்பி வைத்தார், திருச்சி கலெக்டர் சரவணன்!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக இன்று (25.11.2025) தஞ்சாவூர் மாவட்ட அரசு பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களை பாதுகாவலருடன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 17 மாணவர்கள் மற்றும் 4 பார்வைதிறன் சிறப்பாசிரியர்கள், செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியின் 10 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் 2 சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 36 மாணவ, மாணவிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார். அங்கு அவர்கள் மெட்ரோ ரயில் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அருள் பிரகாசம்(தஞ்சாவூர்), இரா.இரவிச்சந்திரன்(திருச்சி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.