Rock Fort Times
Online News

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு “வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்” பிரச்சார பாடல்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!

திமுக யூத்விங் செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்- அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை( நவ. 27) முன்னிட்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், “வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்!” எனும் பாடலை எழுதியுள்ளார். இசையமைப்பாளர் மாரி சக்தி இசையில், பிரபல பின்னணி பாடகர் மனோ இந்தப் பாடலை பாட, அதற்கான வீடியோ வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பாடலை வெளியிட்டார். விழாவில் இப்பாடலை எழுதிய ஜோயல், இசையமைப்பாளர் பி.மாரிசக்தி, பாடகர் மனோ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், “கழகத் தலைவர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழாவில் கழக இளைஞரணிச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில் துணை முதலமைச்சர் வரலாறு படைக்க நாம் அனைவரும் துணை நிற்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்