திருச்சியில் எஸ்.ஏ.பி. டிரேடர்ஸ் ஓ. ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்…* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு திறந்து வைத்தார்!
திருச்சி, கோட்டை ஸ்டேஷன் ரோடு, மாரீஸ் தியேட்டர் அருகே எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ. ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று(24-11-2025) நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு ஓ. ஜெனரல் ஏ.சி நிறுவனத்தின் இயக்குனர் (விற்பனை) பூவையா தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எஸ்.ஏ.பி. டிரேடர்ஸ் உரிமையாளர் தீபக்ராஜா அனைவரையும் வரவேற்றார். திறப்பு விழாவில் தொழிலதிபர் ஆர்.வி.ராம் பிரபு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜானகிராமன், மாநில இணை செயலாளர்கள் திருப்பதி, அம்பாள்ராமு, துணைத்தலைவர் தில்லை மனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரசன்னா, மாநகர தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செயலாளர்கள் திருமாவளவன், அப்பாத்துரை மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.