தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் பெயர் விவரம் முழுமையாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.