Rock Fort Times
Online News

தொடர் மழை காரணமாக திருச்சி உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்று (நவ.24)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நாகப்பட்டினமை், கரூர், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்