Rock Fort Times
Online News

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் பிரம்மாண்ட திரி தயாரிக்கும் பணி தீவிரம்…!

திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மலைக்கோட்டை உச்சியில் கொப்பரையில் பிரம்மாண்ட திரி அமைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி அளவில் செவ்வந்தி விநாயகர், தாயுமான சுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது.  இதற்கான பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்றப்பட இருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்