Rock Fort Times
Online News

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம்…!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் இம்மாதம் நவம்பர் 19-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் வருகிற 27-ந்தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும்’ என கூறப்பட்டிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்