Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்…!

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இந்த ரெயில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20 மற்றும் 23-ந்தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (19-ம் தேதி) முதல் 24ம் தேதி வரை குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்