முனைவர் பட்ட மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த சித்தூர் மணிவேல்….!
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் சித்தூர் மணிவேல். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளர். திமுகவில் கட்சி ரீதியாக பார்த்தால், இப்பகுதி அமைச்சர் நேருவால் மாவட்ட செயலாளராக்கப்பட்ட காடுவெட்டி தியாகராஜனின் திருச்சி வடக்கு மாவட்ட ஆளுகைக்குட்பட்டது. என்றாலும், அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக அரசியல் செய்வது, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்து அசத்துவது, அமைச்சர் அன்பில் மகேஷின் பிறந்த நாளன்று முசிறி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு சொந்த செலவில் தங்க மோதிரத்தை பரிசளித்து சந்தோஷத்தில் ஆழ்த்துவது என அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக களத்தில் படு பயங்கரமாக துடிப்போடு செயல்பட்டு வருகிறார் சித்தூர் மணிவேல். இந்நிலையில், திருச்சி தேசிய கல்லூரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரபரப்பான அரசியல் களம், பம்பரமாய் சுழன்று பணியாற்றக்கூடிய அமைச்சர் பதவி என ஓய்வின்றி உழைக்கும் நேரத்தில் எப்படி இவரால் படிப்பிற்கென தனியாக நேரம் ஒதுக்கி முனைவர் பட்டம் பெற முடிந்தது என ஊர் உலகமே அமைச்சரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருந்த வேளையில், அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் தனது பி.ஹெச்.டி ” வைவா ” குறித்து பேசுவதை படம்பிடித்து விழா மேடையிலேயே அமைச்சருக்கு பரிசளித்து அசத்தினார் சித்தூர் மணிவேல். தனது வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்றான முனைவர் பட்டம் பெறும் மேடையிலேயே தான் பேசுவதை சித்தூர் மணிவேல் ஆன் ஸ்பாட்டில் போட்டோ பிரேமாக பரிளித்தது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.

Comments are closed.