சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாளான இன்று (நவ.17) அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளைத் தொடங்கினார். இன்று முதல் டிசம்பர் 27 வரை கோவில் நடை திறந்திருக்கும். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு முக்கியமானது. இந்த சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் மற்றும் மலைக்கோட்டை கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

Comments are closed.