சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 10.20 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் இலங்கையில் மோசமான வானிலை நிலவுவதாக விமானிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து திருச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானத்தை திருச்சியில் தரையிறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, 44 பயணிகளுடன் இலங்கை புறப்பட்ட விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. யாழ்ப்பாணத்தில் வானிலை சீரான பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.