திருச்சி மாவட்டம், முசிறி அருகே தண்டலைபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னாங்கண்ணிப்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.100.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய பணிகள் திறப்பு விழா மற்றும் ரூ54.96 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காவிரி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். விழாவில், மாவட்ட கலெக்டர் வே. சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் முசிறி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன், துறையூர் ஸ்டாலின்குமார், திருச்சி பயிற்சி ஆட்சியர் கீர்த்தி, மாவட்ட திட்ட அலுவலர் கங்காதரணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed.