Rock Fort Times
Online News

திருச்சி, மன்னார்புரம் அரசு அலுவலர் குடியிருப்பில் குரங்குகள் தொல்லை…* கலெக்டர் நடவடிக்கை எடுக்க குடியிருப்பு மக்கள் வலியுறுத்தல்!

திருச்சி, மன்னார்புரம் பழைய சுற்றுலா மாளிகை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி அரசு அலுவலர் குடியிருப்பு பிளாக்- 1 ல் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த பிளாக்கில் கடந்த சில வாரங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்றுவிட்டு ஓடி விடுகிறது. குழந்தைகள், பெரியோர்களை அச்சுறுத்தி அவர்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பறித்துச் சென்று விடுகிறது. தண்ணீர் குழாய்களை திறந்து விட்டு தண்ணீரை வீணடிக்கிறது. இதுகுறித்து வனத்துறையிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் பிளாக் 1-ல் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். ஆகவே, குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்துச் செல்ல திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்