Rock Fort Times
Online News

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி முன்னிலை: காங்கிரஸ்+78 …!

பீகார் மாநில சட்டப் பேரவையின் பதவி காலம் இம்மாதம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று(14-11-2025) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பநிலை தரவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காலை 10 மணி நிலவரப்படி, பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணி 160 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 78 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகலுக்குள் இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்