Rock Fort Times
Online News

திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் சீட் ஃபோரம் அமைப்பின் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மியாவாக்கி காடுகள் உருவாக்கும் சூப்பர் திட்டம்… * நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது!

திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் சீட் ஃபோரம் அமைப்பின் சார்பில் வருகிற நவம்பர் 17ம் தேதி ,10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டிலுள்ள காவேரி மருத்துவமனையின் ஹெல்த் சயின்ஸ் கேம்பஸில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரும், திருச்சியின் பசுமை மனிதர் என அழைக்கப்படுபவருமான எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் இன்ஜினியரிங் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் கே.பிரேமநாதன் மற்றும் காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான டாக்டர் டி.செங்குட்டுவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். வாழும் உலகை பசுமையாக்கும் நோக்கத்தில் நடைபெற உள்ள இச்சிறப்பு நிகழ்வில், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்