புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சாலையில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரை இறங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் ‘டமார்’ என தரை இறங்கியதால் அதன் முன்பகுதி சேதம் அடைந்தது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், விமானத்தில் இருந்த பயிற்சி விமானி இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.