Rock Fort Times
Online News

மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள்:* அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மணப்பாறை மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் (நவ.13) அமைச்சர் கே.என். நேரு புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ மு.பழனியாண்டி, மணப்பாறை ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஆரோக்கியசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், அரசுத்துறை அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்