திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்படையான சி.ஐ .எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.எஸ்.ஜியின் வேண்டுகோளின்படி., சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மனநல பரிசோதனை முகாம் நவம்பர் மூன்றாம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இச்சிறப்பு மனநல பரிசோதனை முகாம்களில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.கே சரித்ரா பங்கேற்றார். இதில் மொத்தம் 170 யூனிட் பணியாளர்கள் மனநல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.மற்றும் 88 பணியாளர்கள் விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்றனர். இம்மனநல விழிப்புணர்வு முகாமில் நெருக்கடி சூழ்நிலைகளை தடுப்பது மற்றும் சூழலுக்கு ஏற்ற பாதுகாப்பாக நிர்வகிப்பது தொடர்பான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Comments are closed.