Rock Fort Times
Online News

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்… மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் வேண்டுகோள்!

மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவிற்கு நவம்பர் பத்தாம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அன்போடு வரவேற்கிறோம். இத்தகைய அற்புதமான தருணத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகாவல் பகுதியை சுற்றி பல நூறு ஆண்டுகளாக ஆண்டவனுக்கு சேவை செய்து வரும் அடியார்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி பல்வேறு சட்ட பிரச்சினைகளாலும், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால் சட்டப்படி பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொழுது கூட தீர்க்க முடியாத இந்த பிரச்சினையை தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் தீர்ப்பார் என அப்பகுதி மக்கள் திடமாக நம்புகிறார்கள். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை பிரச்சினையை தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை முதன்மை செயலாளர்கள் தலைமையில் திருச்சி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட வல்லுனர்கள், ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் பங்கேற்கும் சட்டபூர்வமான ஒரு குழுவை ஏற்படுத்தி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகாவல் அடிமனை பிரச்சினையை தீர்க்க தகுந்த முன்னெடுப்புகளை ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்