வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் நவ. 11ம் தேதி ஆர்ப்பாட்டம்…!
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் இன்று(நவ.8) நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ. ஆர்.) என்ற பெயரில் நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் பறிபோக வாய்ப்பு உள்ளது. ஆகவே இதனை உடனடியாக நிறுத்தக் கோரியும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நவ.11-ம் தேதி காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், திமுக சார்பில் மத்திய மாவட்ட ஒன்றிய செயலாளர் அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர் மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், விசிக மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், கலைச்செல்வன், ஆற்றல் அரசு, மண்டல செயலாளர் தமிழாதன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, பகுதி செயலாளர் ஜங்ஷன் செல்லத்துரை, மமக மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முகமது ஷெரீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரகுமான், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மாநில செயலாளர் வெங்கடேசன், தி.க.மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மக்கள் நீதி மய்யம் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாநகர செயலாளர் சீனிவாசன் உள்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.