Rock Fort Times
Online News

கீரனூரில் முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி- முன்னேற்பாடு குறித்து அமைச்சர் கே.என். நேரு நேரில் ஆய்வு…!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெறும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நவம்பர் 10ம் தேதி வருகை தர உள்ளார். இந்நிலையில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு, அரசு விழா நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் கே.என். நேரு இன்று (நவம்பர் 7) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரும் இணைந்து பங்கேற்றனர். விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள், அமர்விடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் அமைச்சர் நேரு விரிவாக ஆய்வு செய்தார். மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்கள் வசம் எளிதாக சென்றடைய வேண்டுமெனவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ஆகியோருடன் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்