வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’ பாடலை 1875ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று எழுதியார். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்த பாடல், ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வு இன்று (நவ. 07) தொடங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Comments are closed.