கோவையில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்: அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம்… சீமான் காட்டம்…!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( நவ. 4) மணப்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் நடைபெற்ற நிகழ்வு மட்டும் அல்ல இது போல் பல சம்பவங்கள்
நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சகித்துக் கொள்ள முடியாதது. இந்த சமூகம் கேடு கெட்டதாகிவிட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் முறையற்ற மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தால் நாம் அனைவருமே வெட்கி தலை குனிய வேண்டும். கடும் சட்டங்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நடக்காது. இதேபோல் தான் பொள்ளாச்சியில் நடந்தது , அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது, ஆனால் நடவடிக்கை ஒன்றும் இல்லை. திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா, தெலுங்கானாவில் எடுக்கும் பொழுது தமிழக அரசு எடுக்க மறுத்து மத்திய அரசை எடுக்கவேண்டும் என ஏன் கூறுகிறது. கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் தனி மனிதன் அல்ல என நான் கூறியதைத்தான் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இந்த முறையே தவறு என்று தான் அவர் சொல்லி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.