தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அமைச்சராக உள்ள மு..பெ.சாமிநாதனும் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது தி.மு.க.வில் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. துணை பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டதால் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Comments are closed.