சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நவ.,14 ல் பதவியேற்க உள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய், நவ., 24 ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்து இருந்தார். இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவ.,24ல் பதவியேற்க உள்ளார்.

Comments are closed.