Rock Fort Times
Online News

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை: மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம்- கலெக்டர் சரவணன் பெருமிதம்…!

திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 11,064 மாணவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வியில் சேரும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் உதவித்தொகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 2,919 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டலும், 327 மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ் தொடர்பான ஆலோசனையும் வழங்கப்பட்டது. பெற்றோர் அற்ற 44 மாணவர்கள் “அன்பு கரங்கள்” திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்களுக்கு கல்விக்கடனாக இதுவரை 4,711 பேருக்கு ரூ.114.29 கோடி வழங்கப்பட்டது. “வெற்றி நிச்சயம்” திட்டத்தின்கீழ் 2,188 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், “உயர்வுக்கு படி” முகாம்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சிகளின் பலனாக, 11,064 மாணவர்களில் 10,864 பேர் உயர்கல்வியில் சேர்ந்து 98% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே. சரவணன், கூறுகையில், “அரசு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பெருமைக்குரியது” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்