‘மோந்தா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று(அக்.28) சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் மற்றும் ஆந்திராவில் இருந்து சென்னை வரும் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று மாலை கரையை கடக்கவுள்ளது. இந்த புயல் காரணமாக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை – ஆந்திராவுக்கு வந்து செல்லும் 9 விமானச் சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் மற்றும் சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் 3 விமானங்கள் என மொத்தம் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.