மதுரையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 69). இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி ஜாபர்ஷா பகுதியில் உள்ள வைர நகைகள் சோதனை செய்யும் கடைக்கு வந்தார். அங்கு தனது வைரங்களை சோதனை செய்த பின்னர், தனது சட்டை பாக்கெட்டில் வைரங்களை வைத்துக் கொண்டு நகரப் பேருந்து ஒன்றில் ஏறினார். அந்தப் பேருந்து சிறிது தூரம் சென்றவுடன் பாக்கெட்டில் இருந்த வைரங்களை பார்த்தார். ஆனால் வைரங்கள் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய செல்வராஜ், இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். இந்நிலையில் வைரங்களை திருடியதாக மதுரை மேலூர் பாண்டியன் நகரை சேர்ந்த முகமது சையது இப்ராகிம் ( 28 ),மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன் ( 32 ), மதுரை உத்தங்குடியை சேர்ந்த பாண்டியன் (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.