திருச்சி, வாழவந்தான் கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார், அமைச்சர் அன்பில் மகேஷ்…!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வாழவந்தான் கோட்டை, புது பர்மா காலனி, பழைய பர்மா காலனி, அய்யம்பட்டி, தொண்டமான்பட்டி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த், அண்ணாதுரை, ஊராட்சி செயலாளர் கண்ணன். திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி மற்றும் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.