Rock Fort Times
Online News

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21-ந்தேதி அரசு விடுமுறை நாளாகும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்