Rock Fort Times
Online News

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனிடையே, தீபாவளி பண்டிகைக்காக சொந்த பயன்பாட்டு கார்கள் உள்ளிட்ட வாகனங்களை பலரும் வாடகைக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சொந்த வாகனங்களை உரிமம் இல்லாமல் வாடகைக்கு பயன்படுத்தி பயணிகளை ஏற்றினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்