மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்கு சென்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரி, கணிதா, பாரிஜாதம், மற்றொரு ராஜேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.