Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகை: தாறுமாறாக எகிறிய விமான கட்டணங்களால் பயணிகள் அதிர்ச்சி…!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால் வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் அலுவலர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பயணிகள் சிலர் விமானத்தை அணுக தொடங்கியுள்ளனர். ஆனால், விமானங்களின் பயண டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 ஆகஇருந்து வந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது. சென்னை முதல் திருச்சி வரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608 ஆக இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது. அதேபோல சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் சாதாரண நாட்களை விட பல மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னை-கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது. சென்னை-தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608 இருந்தது, இன்றைய நாள் கட்டணம் ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது. சென்னை-டெல்லி சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது. சென்னை-மும்பை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.21,960 வரை அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.22,169 வரை அதிகரித்துள்ளது. சென்னை ஐதராபாத் சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926 ஆக இருந்தது ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது, சென்னை-கவுகாத்தி சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499 ஆக இருந்தது, ரூ.21,639 வரை அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு விமான கட்டணங்களை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்