தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று(அக்.16) தொடங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 5 முதல் 15 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது. திருச்சி திருச்சியில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
Comments are closed.