பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா…!
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, சட்டப்பேரவைக் கூட்டம் இன்று(அக்.14 )தொடங்கியது. சட்டசபை நடவடிக்கையில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.