Rock Fort Times
Online News

தஞ்சை மாவட்டம், அரசு பள்ளியில் தடுப்புச்சுவர் இன்றி கட்டப்பட்ட கழிப்பறை: இருவர் ‘சஸ்பெண்ட்.’..!

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு கழிவறைக்கு இடையேயும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்