கரூர் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து த.வெ.க.வினர் ஆறுதல்- விரைவில் விஜய் வர உள்ளதாக தகவல்…!
கரூரில், கடந்த 27-ம் தேதி சனிக்கிழமை விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆறுதல் கூறாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகவே பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை, விரைவில் அவர்களை சந்திப்பேன் என்று விஜய் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் விஜய் உத்தரவின் பேரில், தவெக மேற்கு மண்டலச் செயலாளர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பிறகு இன்று(அக்.4) பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர்.

Comments are closed.