Rock Fort Times
Online News

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி காதிகிராப்ட்டில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை…* அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகள் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து குத்து விளக்கே ற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்புகுழு உறுப்பினர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி இயக்குநர்கள்(கதர் கிராமத் தொழில்கள்) கே.என்.சுதா, வ.பாலசுப்பிரமணியன், (செய்தி மக்கள் தொடர்புத்துறை) உதவி தொடர்பு அலுவலர் (செய்தி) மு.சுதாகர் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்