திருச்சி, மேலப்புதூரில் ஜோசப் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. 90 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க இம் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியாக சுபா பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரோட்டரி சங்கத்தின் மூலமும் பல்வேறு சமூக பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கடந்த ஆண்டுகூட திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆஃப் பட்டர்ஃபிளை சங்கத்தின் மூலம் பிராட்டியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 கழிவறைகளை கட்டி கொடுத்து பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறந்த சமூக சேவை புரிந்ததற்கான விருதை திருச்சி டிஸ்ஸபிலிட்டி ஃபோரம் என்கிற அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது. உறையூரில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.குமரவேல் இதற்கான விருதையும், சான்றிதழையும் இவருக்கு வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபுவை மருத்துவர்கள் மற்றும் சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.


Comments are closed.