விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது- தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பாக, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். நடிகை சாய்பல்லவி, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான பட்டியல்:
எஸ்.ஜே.சூர்யா- திரைப்பட நடிகர்
சாய் பல்லவி- திரைப்பட நடிகை
லிங்குசாமி- திரைப்பட இயக்குநர்
ஜெயகுமார்- திரைப்பட அரங்க அமைப்பாளர்
சூப்பர் சுப்பராயன் – திரைப்பட சண்டைப்பயிற்சியாளர்
உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான பட்டியல்:
விக்ரம் பிரபு- திரைப்பட நடிகர்
ஜெயா.வி.சி.குகநாதன்- திரைப்பட நடிகை
விவேகா- திரைப்பட பாடலாசிரியர்
டைமண்ட் பாபு- திரைப்பட செய்தித் தொடர்பாளர்
லட்சுமி காந்தன்- திரைப்பட புகைப்பட கலைஞர்
மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான பட்டியல்:
மணிகண்டன்- திரைப்பட நடிகர்
ஜார்ஜ் மரியான்- திரைப்பட குணச்சித்திர நடிகர்
அனிருத்- திரைப்பட இசையமைப்பாளர்
ஸ்வேதா மோகன்- திரைப்பட பின்னணிப் பாடகி
சாண்டி (எ) சந்தோஷ்குமார்- திரைப்பட நடன இயக்குநர்
நிகில் முருகன்- திரைப்பட செய்தித் தொடர்பாளர்
மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு விருதுகள்
பாரதியார் விருது (இயல்)- முருகேச பாண்டியன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை)- கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்)- பதஸ்ரீ முத்துகண்ணம்மாள்
ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Comments are closed.