திருச்சி மாநகராட்சி 34-வது வார்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்… தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி கிழக்கு தொகுதி மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 34 பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இன்று( செப்.23) நடைபெற்று வருகிறது. முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். முகாமில், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டல குழு தலைவர் மற்றும் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜ்முகமது, வட்டக் கழகச் செயலாளர்கள் சில்வியா, கருணாநிதி, அரியமங்கலம் கோட்டம் உதவி ஆணையர் ஜெயந்தி, தாசில்தார் விக்னேஷ், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம், இளநிலை பொறியாளர் ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Comments are closed.