Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூரில் விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம்: தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கைது…! 

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள முத்துநகர் நியூ டவுன் கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில்  ஏற்பட்ட அடைப்பை சரி செய்த போது விஷவாயு தாக்கி  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி ( வயது 38),  சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு ( 32) ஆகிய  இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரசாத்  திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,  திருச்சி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனமான சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஊழியர்கள் ரவி, பிரபு ஆகிய இருவரும் போதிய உபகரணங்கள் இல்லாமல் பாதாள சாக்கடை அடைப்பை சுத்தம் செய்வதற்காக இறங்கிய போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். பாதாள சாக்கடை பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல்  இருந்துள்ளனர். ஆகவே,  அஜாக்கிரதையாக செயல்பட்டதாக சூப்பர்வைசர் இளவரசன், மேலாளர் கந்தசாமி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மேற்பார்வையாளர் இளவரசன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்