ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், துரை வைகோ எம்பி மாலை அணிவித்து மரியாதை…!
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள ராமஜெயம் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் இன்று (செப்.22) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், கிழக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், செந்தில் மற்றும் மாவட்ட, மாநகரக் கழக நிர்வாகிகள், பகுதி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.