Rock Fort Times
Online News

ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று(செப்.22) முதல் அமல்:* 375 பொருட்களின் விலை குறைந்தது…!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று(22-09-2025) முதல் அமலுக்கு வந்தது . இதன்​மூலம் 375 பொருட்களின் விலை குறைந்​தது. சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்​தது. இதில் பல்​வேறு பொருட்​களுக்​கான வரியைக் குறைக்க வேண்​டும் என எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்தி வந்​தன. இந்​நிலை​யில், ஜிஎஸ்டி வரி அடுக்​கு​கள் 4-லிருந்து 2 அடுக்​காக குறைக்​கப்​படும் என பிரதமர் மோடி சுதந்​திர தின உரை​யில் அறி​வித்​தார். இதையடுத்​து, இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு திட்​டத்​துக்கு அதன் கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கியதுடன் நவராத்​திரி விழா​வின் தொடக்க நாளான செப்​டம்​பர் 22 முதல் அமலுக்கு வரும் என அறிவிக் கப்​பட்​டது. மத்​திய அரசின் அறி​விப்​பின்​படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்​தது. இதன்​படி, இனி 5% மற்​றும் 18% என இரண்டு அடுக்​கு​கள் மட்டுமே இருக்​கும். ஏற்​கெனவே 28% வரி விதிப்​பின் கீழ் இருந்த 90% பொருட்​கள் 18% வரி விகிதத்​தின் கீழ் மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், உணவுப் பொருட்​கள், வாகனங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள் உட்பட 375 பொருட்​களின் விலை கணிச​மாகக் குறைந்​துள்​ளது. நெய், பன்னீர், வெண்​ணெய், ஜாம், உலர் பழங்​கள், காபி மற்​றும் ஐஸ் கிரீம் உள்​ளிட்ட பொருட்​கள் விலை குறைந்​துள்​ளது. இது​போல, டி.​வி., ஏ.சி., வாஷிங் மெஷின் உள்​ளிட்ட வீட்டு உபயோக பொருட்​களின் விலை​யும் குறைந்​துள்​ளது. பெரும்​பாலான மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக குறைந்​துள்ள​தால் அவற்​றின் விலைகளும் கணிச​மாக குறைந்துள்ளது. சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி 28%-லிருந்து 18% ஆக குறைந்​துள்​ள​தால் வீடு கட்​டு​வோர் பயனடை​வார்​கள். வாக​னங்​களுக்​கான ஜிஎஸ்டி 28-லிருந்து 18% ஆக குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், புதி​தாக வாக​னம் வாங்​கு​வோர் அதிக அளவில் பயனடை​வார்​கள். உடற்​ப​யிற்சி மையங்​கள், முடி திருத்​தும் நிலை​யங்​கள், யோகா பயிற்சி மையங்​கள் உள்​ளிட்ட சேவைத் துறைக்​கான ஜிஎஸ்டி 18-லிருந்து 5% ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. சோப்​பு, ஷாம்​பு, டூத்​பிரஷ், டூத்​பேஸ்ட், ஷேவிங் கிரீம், டால்கம் பவுடர் உள்​ளிட்​ட​வற்​றுக்​கான ஜிஎஸ்டி 12 மற்​றும் 18-லிருந்து 5% ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. இதனால் பொது மக்​களின் நுகர்​பொருள் செலவு கணிச​மாக குறை​யும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்