8-வது சம்பள கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் முன்பு பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று (செப்.19) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திரளான தொழிலாளர்கள் பங்கேற்று 8வது சம்பளக் கமிசன் கமிட்டியை காலதாமதமின்றி உடனடியாக நியமித்து குறிப்பு விதிமுறைகளை வெளியிட வேண்டும், 1.1.2026 முதல், புதிய சம்பள விகிதங்களை அமல்படுத்திட வேண்டும், அனைத்து காலியிடங்களையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் பென்ஷனை முடக்காமல் அவர்களுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் .
Comments are closed.