Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி… தகுதியுடையோர் விண்ணப்பிக்க அழைப்பு!

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 2025–2026-ம் கல்வி ஆண்டிற்கான (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மத வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 01.07.2025 தேதியின்படி 14 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். பயிற்சியின் போது ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும். தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் திருக்கோயில் சார்பில் இலவசமாக வழங்கப்படும். இதில் சேர தகுதி உடையோர் வருகிற 30.09.2025 மாலை 5 மணிக்குள் இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 94433 98769, 84288 25526 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்