Rock Fort Times
Online News

இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…!

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், பொருளாளர் ராஜசேகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், மீனவரணி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு வெங்கட் பிரபு, இலக்கிய அணி பாலாஜி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அப்பாஸ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, என்.எஸ். பூபதி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், வாசுதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொன்னர், முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, மீனவரணி ஆதவன், மாவட்ட பிரதிநிதி புகழேந்திரன், பாலக்கரை சத்திவேல், பேராசிரியர் தமிழரசன், வசந்தம் செல்வமணி, நாட்ஸ் சொக்கலிங்கம், தில்லைநகர் முருகன், கே.பி. கண்ணன், ஐடி. பிரிவு நாகராஜ், வெல்லமண்டி கண்ணியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்