இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை…!
சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் டோல்கேட் சுப்பிரமணி, குடமுருட்டி சேகர், கோட்டத் தலைவர் துர்காதேவி, பகுதி செயலாளர் இளங்கோ, மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.