Rock Fort Times
Online News

தமிழகத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு…!

தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு களில் அறநிலை​யத்துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக்கோரி செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத்துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர் பி.சுப்பாராஜ், மனு​தா​ரர்​கள் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ராம.அருண்​ சு​வாமி​நாதன், ஜெய​ராம் சித்​தார்த், ஏ.ஆர்.லக்ஷ்மணன், விஷ்ணுவர்த்​தன் ஆகியோர் வாதிட்​டனர். இந்த அறி​விப்​பாணை​கள் வணிக நோக்​கத்​தில் பல்​வேறு கட்​டிடங்​களை கட்​டு​வதன்மூலம் அறநிலையத்துறை வணிக நடவடிக்​கை​யில் இறங்​கி​யிருப்​பதை காட்​டு​கிறது. கோயில் உபரி நிதி​யில் திரு​மணம் கட்​டும் விவ​காரத்​தில் உயர் நீதி​மன்​றத்​தில் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்​டு, அந்த வழக்​கு​களில் விரி​வாக விவாதம் நடத்​தப்​பட்டு உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வழக்​கு​களில் எழுப்பப்பட்டுள்ள விவ​காரங்​கள்​தான் இந்த வழக்​கு​களி​லும் எழுப்​பப்​பட்​டுள்​ளன. இதனால், அவற்​றின் உத்​தரவு இந்த வழக்​கு​களுக்​கும் பொருந்​தும். அந்த உத்தரவின்​படி, கோயில் நிதியை இந்து மத நிகழ்​வு​கள், கோயில் மேம்​பாடு, பக்​தர்​களின் நலன் ஆகிய​வற்​றுக்​குத்​தான் பயன்​படுத்த வேண்​டும். இதைக் கருத்​தில் கொள்​ளாமல் கோயில் நிதி​யில் வணிக ரீதி​யாக கட்​டிடங்​கள் கட்ட முடிவு செய்து அறி​விப்​பாணை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இது அறநிலை​யத் துறை சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வது தொடர்​பான அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது எனக் கூறப்​பட்​டுள்​ளது. இந்த உத்​தர​வின்​படி கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்கள் கட்​டு​வது தொடர்​​பான அரசு மற்​றும்​ அறநிலை​யத்​துறை​யின்​ உத்​தரவு மற்​றும்​ அறி​விப்​​பாணை​கள்​ ரத்​து செய்​யப்​படு​கின்​றன. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்